விடாமுயற்சி டிரைலர் வெளியானது ; ஆக்ஷனில் அதகளம் பண்ணும் அஜித் : பிப்., 6ல் படம் ரிலீஸ் | ஹாலிவுட் வெப் தொடரில் நடிக்கும் திஷா பதானி | பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ | சைந்தவி உடன் இணைந்து பணியாற்றுவது ஏன்? - ஜி.வி.பிரகாஷ் சொன்ன பதில் | இரும்புக்கை மாயாவி படத்தில் நடிக்கும் அமீர்கான்? | விஜய்க்கு சொன்ன மூன்று கதை : மகிழ் திருமேனி | சூப்பர் ஹீரோ கதையில் சூர்யா | ஸ்ருதிஹாசன் குரலில் வெளிவந்த டிரெயின் முன்னோட்டம் | டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 10 வருட பயணத்தை நினைவுகூர்ந்த ஆதி |
சின்னத்திரை நடிகையான சாய் காயத்ரி ஈரமான ரோஜாவே, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சில தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். தற்போது சீரியல் நடிப்பதற்கு ப்ரேக் விட்டுள்ள சாய் காயத்ரி, சொந்தமாக அழகு சாதனப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். சாய் சீக்ரெட்ஸ் என்ற அந்த கம்பெனியில் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்.
இந்நிலையில், சாய் காயத்ரி அண்மையில் தனது கம்பெனியில் இருக்கும் ஒரு இயந்திரத்தில் கையை விட்டு விபத்தில் சிக்கியுள்ளார். இதில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எனினும் 2 வாரங்களில் சரியாகிவிடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து சாய் காயத்ரியின் ரசிகர்கள் சீக்கிரமே அவர் பூரண நலம் பெற வர வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.