ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா தொடருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. மிர்ச்சி செந்தில், நித்யா ராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரமான வீரா என்கிற வீரலெட்சுமி கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் வீஜே தாரா நடித்தார். இவர் விலக அதன்பிறகு தர்ஷு சுந்தரம் நடித்தார். அவரும் விலகிவிட கவுரி கோபன் என்ட்ரி கொடுத்தார். ஆனால், தற்போது கவுரி கோபனும் அண்ணா தொடரிலிருந்து அதிரடியாக விலகியிருக்கிறார். இப்படி வீரா கதாபாத்திரத்தில் நடித்த மூன்று நடிகைகளுமே அடுத்தடுத்து விலகிவிட்டனர். இதனையடுத்து அந்த கதாபாத்திரத்தில் சுசித்ரா என்ற நடிகை நடிக்கவிருக்கிறார். இவர் எத்தனை நாளைக்கு தாக்குபிடிப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.