டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா |
சித்து - ஸ்ரேயா அஞ்சன் தம்பதியினர் மீண்டும் ஜோடியாக நடிக்க தொடங்கியுள்ள சீரியல் 'வள்ளியின் வேலன்'. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த சாக்ஷி சிவா வெளியேறியிருக்கிறார்.
இதற்கு காரணம் என்னவென்றால், சாக்ஷி சிவா தான் நடிக்கும் அனைத்து சீரியல்களிலும் குறிப்பிட்ட டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஒருவரையே தனக்காக பேச வேண்டும் என்று கண்டிஷன் போடுவாராம். இதற்காக இவர் தரப்பிலிருந்து சில அட்ஜெஸ்மெண்டுகளும் செய்து கொள்வாராம். இப்படியிருக்க இந்த தொடரில் ஆரம்பத்தில் சாக்ஷி சிவாவிற்காக அவர் சொன்ன அதே டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டையே பேசுவதற்கு புக் செய்துள்ளனர். ஆனால், அவருக்கு சம்பளம் அதிகம் என்பதால் அவரை நீக்கிவிட்டு வேறு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டிற்கு சென்றுள்ளனர். இதனால் ஏற்பட்ட பிரச்னையில் தான் சாக்ஷி சிவா சீரியலை விட்டு வெளியேறியிருக்கிறார்.