தரன் தரும் தரமான இலக்கியம் | பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” | ஜோதிடத்தை நம்பி படத்தை போட்ட வம்பு நடிகர் | கதை கேட்காமல் நடித்தேன்: 'சர்ப்ரைஸ்' தரும் சாயாதேவி | கந்தன் கருணை, ஆழ்வார், சர்கார் - ஞாயிறு திரைப்படங்கள் | தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு |
ஈரமான ரோஜாவே முதல் சீசனில் புகழ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் ஷ்யாம். முன்னதாக புதுக்கவிதை, களத்து வீடு, மெல்ல திறந்தது கதவு, லக்ஷ்மி கல்யாணம், பகல் நிலவு என பல ஹிட் தொடர்களில் நடித்திருக்கிறார். சில திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சினிமா வாய்ப்பு தேடி அலைந்த ஷ்யாமுக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதுகுறித்து ஆரம்ப காலக்கட்டத்தில் சில தகவல்கள் வெளியாகியிருந்தாலும் அதன்பிறகு அந்த படம் என்னவானது என்று தெரியவில்லை.
இந்நிலையில் மீண்டும் சின்னத்திரைக்கே வந்துள்ள ஷ்யாம், ஜீ தமிழில் சூப்பர் ஹிட் அடித்து வரும் இதயம் தொடரில் அழகர் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார். இதனை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.