அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
சின்னத்திரையில் பகல் நிலவு சீரியலின் மூலம் நடிகையாக என்ட்ரி கொடுத்தார் ஷிவானி நாராயணன். பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே சீரியல் நடித்து பிரபலமான ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியால் புகழின் உச்சத்திற்கு சென்ற அவர் சினிமாவிலும் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக கிளாமரில் இறங்கிய ஷிவானி உடல் எடையை குறைத்தும் பிட்னஸில் செக்ஸியாக போஸ் கொடுத்தும் ரசிகர்களை கவர்ந்து வந்தார்.
இந்நிலையில், அவர் அண்மையில் வெளியிட்ட புகைப்படம் ஒன்றில் அவரது முக அமைப்பே சற்று மாறி பெரிதான உதடுகளுடன் இருந்தன. ஏற்கனவே சில நடிகைகள் அழகாகிறேன் என்கிற பெயரில் முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளனர். ஷிவானியும் அவரைப்போலேவே பிளாஸ்டிக் சர்ஜரி எதுவும் செய்து கொண்டாரா? எப்படி இருந்த ஷிவானி இப்படி ஆகிட்டாங்களே? என ரசிகர்கள் வருத்தத்துடன் கருத்து பதிவிட்டுள்ளனர்.