சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

ஜீ தமிழில் ஒளிபரப்பான ரஜினி தொடரின் மூலம் சின்னத்திரை நேயர்களுக்கு பரிட்சயமானவர் சுபிக்ஷா. தொடர்ந்து பல தொடர்களில் நடித்து வரும் இவர் தற்போது வீரா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கும் டான்ஸ் மாஸ்டரான மானஸ் என்பவருக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடந்ததாகவும், சில நாட்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், இதுகுறித்து இருவருமே எந்தவொரு விளக்கத்தையும் தரவில்லை. அதேசமயம் இருவரும் தங்கள் சோஷியல் மீடியாக்களில் ஒன்றாக பதிவிட்ட புகைப்படங்களை நீக்கிவிட்டனர். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 18ம் தேதியன்று அவினாஷ் என்பவருடன் சுபிக்ஷாவிற்கு கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவ ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.