ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
'கண்ணை நம்பாதே' படத்தில் நடித்து முடித்துள்ள சுபிக் ஷா கிருஷ்ணன், சந்திரமுகி 2 படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி: 'கண்ணை நம்பாதே' படத்தில் அபர்ணா என்ற பாத்திரத்தில் நடித்துள்ளேன். 'நேச்சுரல் லுக்'காகவே இயக்குனர் என்னை தேர்வு செய்தார். கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
'சந்திரமுகி 2' படத்திலும் கதை முழுக்க வரும் பாத்திரமாக இருந்தது. 'நீ நடித்தால் சரியாக இருக்கும்' என இயக்குனர் கூறினார். 'சந்திரமுகி' படத்தின் பெரிய ரசிகை நான். அதன் இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இயக்குனர் பி.வாசு, ராகவா லாரன்ஸ் மற்றும் ஒட்டு மொத்த படக்குழுவுடன் ஒரு குடும்பமாகவே பயணிக்கிறோம். இப்படத்திற்காக உடல் எடையையும் குறைத்தேன். இதற்கு ராகவா லாரன்ஸே காரணம். அவர் தரும் ஊக்கம் ஒட்டு மொத்த படக்குழுவுக்குமே செம எனர்ஜி.
நிறைய சக நடிகையருடன் நடிப்பதால் போட்டி அதிகம் இருக்கும் என நினைத்தேன். ஆனால் அப்படி எதுவும் இல்லை. ஒருவருக்கொருவர் நிறைய கற்றுக் கொள்கிறோம். அடுத்ததாக தமிழிலும், ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.