பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா | தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் |
சமீபத்தில் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று முடிந்துள்ளது. ஆர்ஆர்ஆர் மற்றும் தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் என இந்தியாவை சேர்ந்த இரண்டு படங்கள் ஆஸ்கர் விருது பெற்றதை இந்திய ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிகழ்வில் ஆர்ஆர்ஆர் படத்தை பாலிவுட் படம் என மேடையில் குறிப்பிட்டதற்காக தெலுங்கு ரசிகர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும்போது நகைச்சுவை என்கிற பெயரில் யாரையும் புண்படுத்தி விடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு அவர் தயார் செய்து வைத்திருந்த சில ஜோக்குகளுக்கு முன்கூட்டியே கடிவாளமும் போடப்பட்டதாக இந்த விழா ஏற்பாட்டினை கவனித்துக் கொண்ட தயாரிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த வருடம் ஆஸ்கர் விருது வழங்கும்போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நகைச்சுவை நடிகர் கிரிஸ் ராக் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மனைவியை பற்றி நகைச்சுவையாக பேசுவதாக நினைத்துக்கொண்டு உருவ கேலி செய்தார். இதற்கு உடனடியாக எதிர்வினை ஆற்றிய வில் ஸ்மித் அனைவர் முன்னிலையிலும் கிரிஷ் ராக்கை கன்னத்தில் அறைந்த நிகழ்வு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விருது வழங்கும் விழா முடிந்த பின்னரும் கூட பல நாட்கள் இது பற்றி உலகெங்கிலும் பேசப்பட்டது. இந்தமுறை இது போன்ற சங்கடம் தரும் நிகழ்வுகள் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த ஆஸ்கர் விருது விழா ஒருங்கிணைப்பு குழுவினர் முன்கூட்டியே ஜிம்மி கிம்மலிடம் இதுகுறித்து எச்சரிக்கை செய்துவிட்டனர்.
இதுகுறித்து விழா மேடையில் ஜிம்மி கிம்மல் பேசும்போது கூட இங்கே யாராவது ஒருவர் எந்த நேரத்திலாவது வன்முறை காட்ட நினைத்தால் அவருக்கும் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்படும். மேலும் 19 நிமிடம் நீண்ட உரையாற்றவும் அனுமதிக்கப்படும் என்றும் கிண்டலுடன் குறிப்பிட்டார்.