சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு |
நபீஹா மூவீஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் நுபாயஸ் ரகுமான் தயாரித்துள்ள படம் சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை. நாயகனாக ருத்ரா நடித்துள்ளார். மற்றும் சுபலக்ஷ்மி, ராட்சசன் வினோத் சாகர், கணபதி, பீட்டர் ஹார்ட்லி, மகேஷ் பத்மநாபன், சுனந்தா ஆகியோர் நடித்துள்ளனர். சுபிக்ஷா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். அவர் ஒப்பந்தப்படி படத்தின் புரமோசனுக்கு வருவதில்லை என்று தயாரிப்பாளரும், நாயகனுமான ருத்ரா புகார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: கதாநாயகிகள் நடிக்க ஒப்பந்தம் செய்யும்போது அக்ரிமெண்டில் பட புரோமோஷன்களுக்கு வருவோம் என்று கையெழுத்து போட்டாலும் பெரும்பாலும் அதை கடைபிடிப்பதில்லை. அந்த வகையில் கடுகு படத்தில் நாயகியாக நடித்த சுபிக்ஷா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் இசை வெயியீட்டிற்கு வருமாறு, தயாரிப்பாளரும், இயக்குனரும், நானும் மாறி மாறி அழைத்தும் வரவில்லை, நான் வெளியூரில் படப்பிடிப்பில் இருக்கிறேன் என்றார். இதற்கிடையே இசை வெளியீடு முடிந்து தற்போது படம் வருகின்ற 31ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் புரமோஷன்களில் கலந்து கொண்டு படத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டும் வர மறுக்கிறார்.
அவருக்கு எந்தவொரு சம்பள பாக்கியும் இதுவரை வைக்கவில்லை இருந்தும் இதுபோல் நடந்து கொள்கிறார். என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. இது சம்மந்தமாக நடிகர் சங்கத்தில் புகார் அளிக்க போகிறோம். இந்த படத்தை உருவாக்க நாங்கள் அவ்வளவு கஷ்டப்பட்டோம். என்கிறார் ருத்ரா.