லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
டிக் டாக் புகழ் இலக்கியா நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் நீ சுடத்தான் வந்தியா. இப்படத்தை கே.துரைராஜ் இயக்கி இருக்கிறார். ஆல்பின் மீடியா தயாரித்துள்ளது. இப்படத்தில் இலக்கியாவுக்கு ஜோடியாக புதுமுக நடிகர் அருண்குமார் நடித்துள்ளார். இப்படம் சென்சாரில் சிக்கி படம் வெளியாகாமல் இருந்தது. தற்போது படத்திற்கு சென்சார் அனுமதி கிடைத்ததை தொடர்ந்து ரிலீஸ் வேலைகள் நடக்கின்றன.
இயக்குனர் கே.துரைராஜ் கூறியதாவது: இது ஒரு காதல் ,சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தை மிகப்பெரிய பட்ஜெட் படம் என்று சொல்லலாம். முழுநீள வணிகப் படத்துக்கு என்னென்ன தேவையோ அதற்கேற்ப படப்பிடிப்பு உபகரணங்களைக் கொண்டுதான் படப்பிடிப்பு நடத்தினோம். இம்மாதம் டிசம்பர் 31 இறுதியில் இப்படம் திரைக்கு கொண்டுவர முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன ரசிகர்களுக்கு விருந்தாக நிச்சயம் இத்திரைப்படம் இருக்கும் என்றார்.