'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழ் திரையுலகில் 90கள் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் நடிகை நிரோஷா. தற்போது சினிமா மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் கோமதி என்கிற ரோலில் நடித்து வருகிறார்.
இது குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள நிரோஷா, 'நான் இதுவரை எத்தனையோ சீரியல்களில் நடித்து இருக்கிறேன். ஆனால் , பாண்டியன் ஸ்டோர்ஸ் கோமதியாக ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டனர். ரோட்டில் நடந்து செல்லும் போது கூட கோமதி என்று அழைத்து அட்வைஸ் செய்கின்றனர். எனது அம்மா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பார்த்துவிட்டு நீயா இப்படியெல்லாம் நடிக்கிற? என்று கேட்கிறார்' என்று கூறியுள்ளார்.
நிரோஷா சில வருடங்களுக்கு முன் சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமாக வலம் வந்தார். அதன்பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான் மீண்டும் அவருக்கு அந்த புகழை தந்துள்ளது.