இத்தனை வயதிலும் பிகினியில் அசத்தும் ஸ்ரேயா | நான் உயிர் உள்ள மனுஷி - சாய் பல்லவி | மீண்டும் புத்துயிர் பெறும் 'சங்கமித்ரா' | சினிமாவில் வெற்றி தான் முக்கியம் : மணிகண்டன் | நீக் படத்திற்கு எஸ்.ஜே.சூர்யா விமர்சனம் : தனுஷ் நன்றி | முதல் 3 நாட்களில் 12 கோடி வசூலித்த கங்கனாவின் 'எமர்ஜென்சி' | 2025ல் ராஷ்மிகாவின் முதல் படம் பிப்ரவரி 14ல் வெளியாகிறது! | பிரேமலு 2ம் பாகம் அப்டேட் | காதலியை மணந்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து | கவுதம் மேனன் இயக்கத்தில் ரவி மோகன் |
தமிழ் சின்னத்திரையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் யுவராஜ் நேத்ரன். விஜய் டிவியில் ஒளிபரப்பான பாய்ஸ் வெசஸ் கேர்ஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்திருந்தார். இவரது மனைவி தீபாவும், மூத்தமகள் அபிநயாவும் கூட சீரியல்களில் நடித்து வருகிறார்கள். கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரஞ்சிதமே தொடரில் சிறப்பாக நடித்து வந்த நேத்ரன் திடீரென சீரியலை விட்டு விலகினார். இதற்கான காரணம் பலருக்கும் தெரியாதிருந்த நிலையில், நேத்ரனுக்கு புற்றுநோய் பாதிப்பு தீவிரமடைந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதும், அப்போது கல்லீரலிலும் பாதிப்பு கண்டறியப்பட்டதால் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும் தற்போது தெரியவந்துள்ளது.
நேத்ரனின் தற்போதைய உடல்நிலை குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அபிநயா தனது தந்தை சீக்கிரம் குணமாக பிரார்த்தனை செய்யுமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்களும் நேத்ரன் பூரண நலம் பெறுவார் மீண்டும் சீரியல் நடிப்பார் என நேத்ரனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.