'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் சீரியல் நடிகரான விஷ்ணுகாந்த் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, சிப்பிக்குள் முத்து, என்றென்றும் புன்னகை ஆகிய தொடர்களில் நடித்திருக்கிறார். சக நடிகையான சம்யுக்தாவை திருமணம் செய்து கொண்ட அவர் கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்களிலேயே பிரிந்துவிட்டார். அதன் பின் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த விஷ்ணுகாந்த் தெலுங்கில் குண்டேநிண்டா குடிகண்டலு என்கிற தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக வித்யா நம்பர் 1 தொடரில் நடித்த தேஜஸ்வினி கவுடா நடித்து வருகிறார். தற்போது இவருக்கு தெலுங்கிலும் ரசிகர் கூட்டம் உள்ளது.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் தோசை மாவில் சாரி என எழுதி மன்னிப்பு கேட்கும் விஷ்ணுகாந்த்தின் பதிவு இணையத்தில் வைரலானது. அவர் யாரிடம் மன்னிப்பு கேட்கிறார் என ரசிகர்கள் குழம்ப, அந்த பதிவில் விஷ்ணுகாந்தின் கெட்டப் பாலு கதாபாத்திரம் போல் உள்ளதால், சீரியல் படப்பிடிப்பிற்காக எடுத்த வீடியோவை தான் விஷ்ணுகாந்த் வெளியிட்டிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.