2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

சின்னத்திரை நடிகர்கள் விஷ்ணுகாந்த்-சம்யுக்தா விவகாரம் தொடர்ந்து சோஷியல் மீடியாக்களிலும் செய்தி ஊடகங்களிலும் பேசுபொருளாகி வருகிறது. இந்நிலையில், அண்மையில் குடும்பத்துடன் பேட்டி அளித்த சம்யுக்தா தனது கணவர் விஷ்ணுகாந்த் தன்னை செக்ஸ் டார்ச்சர் செய்ததாக புகார் கூறினார். இதனையடுத்து நேற்று லைவ்வில் வந்த விஷ்ணுகாந்த் சம்யுக்தாவுக்கு அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி எச்சரித்துள்ளார். அவர், 'நீங்க 4 பேர் கூட மாறி மாறி ரிலேஷன்ஷிப்ல இருந்துருக்கீங்க. ஒருத்தரை பிடிக்கலைன்னா அவங்கள கழட்டிவிட்டுட்டு அடுத்த ஆள்கிட்ட அவர் என்கிட்ட மிஸ்பிகேவ் பண்ணதா சொல்லி நடிச்சிருக்கீங்க. நீங்க ஏமாத்துறது அவங்களுக்கு தெரிஞ்சு தான் அவங்க உங்கள பத்தி விஷயமெல்லாம் ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்காங்க.
மியூச்சுவலா ரிலேஷன்ஷிப்ல இருக்கும் போது உங்களுக்கு எல்லாம் நல்லா இருக்கு. உங்களுக்கு பிடிக்கலேன்னா அவங்க எல்லோரும் மிஸ்பிகேவ் செஞ்சதா சொல்லுவீங்களா?. என் விசயத்தில உங்களால அப்படி சொல்ல முடியல. நான் உங்கள கல்யாணம் பண்ணிட்டேன். அதனால தான் நமக்குள்ள இருந்த உறவ செக்ஸ் டார்ச்சர்னு சொல்லி கொச்சப்படுத்துறீங்க. தப்பிக்கிறதுக்கு தந்திரமா யோசிக்கிறதா நினைச்சு பொய்யான விசயத்த திருப்பி திருப்பி சொல்றீங்க. ஆனா, மக்களுக்கு உண்மை என்னன்னு தெரியும். அதனால தான் அவங்க எங்க பக்கம் இருக்காங்க. உங்ககிட்ட ஏமாந்தவங்க உங்கள பத்தின உண்மைகள எனக்கு அனுப்பிட்டே இருக்காங்க. அதெல்லாம் வெளிய விட்டா உங்களுக்கு தான் அசிங்கம். இதோடு நிறுத்திக்கோங்க சம்யுக்தா. என் வழியில என்னை போகவிடுங்க' என்று எச்சரித்து பேசியுள்ளார்.