ஷபானாவா இது... : குழம்பிய ரசிகர்கள் | சின்னத்திரையில் பாண்டியராஜன் | எப்போ கல்யாணம் பண்ணுவீங்க? அமீர் - பாவ்னிக்கு ரசிகர்கள் கேள்வி | 'டிராகான் Vs நி.எ.மே.எ.கோபம்' - இளைஞர்களைக் கவரப் போவது யார்? | ஒரு மணி நேரத்திலேயே பொய் பேசிய கயாடு லோஹர் | கன்னடர்களின் கோபத்திற்கு ஆளான ராஷ்மிகா மந்தனா | ஒன்பது படங்களில் ஒன்றாவது வசூலைக் குவிக்குமா ? | இசையமைப்பாளர் தமனுக்கு கார் பரிசளித்த பாலகிருஷ்ணா | பட்டங்கள் வாழ்க்கைக்கு உதவுவதில்லை : ராஷ்மிகா | ஷங்கர் இயக்கத்தில் துருவ் விக்ரம்? |
சின்னத்திரை நடிகை சம்யுக்தா நடிகர் விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்து இரண்டு மாதங்களிலேயே பிரிந்துவிட்டார். இதனை தொடர்ந்து சோஷியல் மீடியாவில் இருவரும் மாறி மாறி குற்றம் சொல்லி வந்தனர். ஒருகட்டத்தில் விஷ்ணுகாந்த் தனக்கு வந்த ஆடியோவை ஊடகத்தில் வெளியிட்டு சம்யுக்தா செய்த தவறுகளை அம்பலபடுத்தினர். அந்த ஆடியோவின் மூலம், சம்யுக்தா ஒரே சமயத்தில் இரண்டுபேரை காதலிப்பது போல் பேசியதும், விஷ்ணுகாந்தை ஏமாற்றியதும் அம்பலமானது.
தற்போது அந்த ஆடியோ வைரலாகி வரும் நிலையில் சிலர் சம்யுக்தாவிற்கும் சிலர் விஷ்ணுகாந்திற்கு சப்போர்ட் செய்து பேசி வருகின்றனர். அந்த ஆடியோ குறித்து தற்போது பேசியுள்ள சம்யுக்தா அண்ணன் என்று நம்பி அவரிடம் இதையெல்லாம் சொன்னேன். அவர் மிகவும் கேவலமாக நடந்து கொண்டார் என்று கூறியுள்ளார். மேலும், அந்த ஆடியோவில் சம்யுக்தாவிடம் பேசி அதை விஷ்ணுகாந்திற்கு அனுப்பியது 'நாம் இருவர் நமக்கு இருவர்' இயக்குநர் ஹரீஸ் என்பதும் தெரியவந்துள்ளது.