மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‛மகாநதி' தொடரில் கங்கா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் பிரதீபா. சில நாட்களே நடித்திருந்தாலும் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார். அதன்பின் மகாநதி சீரியலிலிருந்து விலகிய அவர் மலையாள படத்தில் நடிக்க கமிட்டாகியிருந்தார். அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் அப்டேட்டுகளை அவ்வபோது வெளியிட்டு வந்தார். தற்போது அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் ‛கொண்டல்' படத்தில் பிரதீபா தான் லீட் ரோலில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். எனவே தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ள பிரதீபாவுக்கு ரசிகர்களின் வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.