தமிழ் சின்னத்திரையில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ஸ்ரீவித்யா நஞ்சன். இவருக்கு அர்ஜுனன் கார்த்திக் என்பவருடன் திருமணமாகி சில ஆண்டுகள் சென்றுவிட்ட நிலையில், அண்மையில் தான் கருவுற்றார். அவரது வளைக்காப்பு நிகழ்வும் சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்திருந்தது. இந்நிலையில் தற்போது ஸ்ரீவித்யா அர்ஜுனன் தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அர்ஜுனன் கார்த்திக் இன்ஸ்டாகிராமில் பதிவிட சக நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.