ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் | 'டூரிஸ்ட் பேமிலி' கனெக்ஷன் : போன வாரம், இந்த வாரம்… | காதலர் தின ஸ்பெஷல் 4 ரீ ரிலீஸ் | பிப்ரவரி 13ல் ரிலீஸ் ஆகும் படங்கள்… | ஆண் கர்ப்பமானால்... தமிழில் தயாராகியுள்ள வெப் தொடர் |

சின்னத்திரையில் குக் வித் கோமாளி முதல் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர் புகழ். அதோடு, பல திரைப்படங்களிலும் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜயகாந்த் மறைந்ததை அடுத்து அவரது நினைவிடத்தில் நேற்று நடிகர் புகழ் அஞ்சலி செலுத்த சென்றுள்ளார். அப்போது அவர் மீடியாக்களை சந்தித்தபோது, கேப்டன் ஐயாவின் மறைவுக்கு ஏற்கனவே நான் அஞ்சலி செலுத்தினேன். இன்று மீண்டும் அஞ்சலி செலுத்த வந்ததின் காரணம் பசி என்று வருபவர்களுக்கு வயிறார உணவளித்து அவர் வழி அனுப்பி வைத்ததாக கேள்விப்பட்டேன்.
நான் கூட சென்னைக்கு வந்த போது பக்கோடா, வாட்டர் பாட்டில் மட்டும் தான் மதிய உணவாக சாப்பிட்டு இருந்தேன். இந்த நிலையில் விஜயகாந்த் அவர்களின் ஆசீர்வாதத்தோடு இன்று முதல் சென்னை கே.கே நகரில் உள்ள எனது அலுவலகத்தில் தினமும் 50 பேருக்கு மதிய உணவு வழங்கப் போகிறேன். முதலில் 50 பேர் என்று ஆரம்பித்து நாளடைவில் அதை அதிகரிக்க போகிறேன். இது குறித்து விரைவில் விரிவான வீடியோ வெளியிடுவேன் என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் புகழ்.




