Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

புத்தாண்டு கொண்டாட்டம் - ஜீ தமிழ் ரசிகர்களுக்கு செம ட்ரீட்.!

30 டிச, 2023 - 19:12 IST
எழுத்தின் அளவு:
New-Years-Celebration---A-treat-for-Zee-Tamil-fans!

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக திகழும் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து சிறப்பான வரவேற்பு கிடைக்கிறது.

சமீபத்தில் சரிகமப நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நடந்து முடிந்ததை தொடர்ந்து சாமானியர்களை சாதனையாளர்களாக மாற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரிலோடட் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தொடங்கியது. பல வகையான ஆடிஷன் மூலமாக மொத்தம் 24 போட்டியாளர்கள் தேர்வாகிய நிலையில் கடந்த வாரம் ஒளிபரப்பான மெகா ஆடிஷன் மூலமாக மொத்தம் 12 போட்டியாளர்கள் தேர்வாகினர்.

இந்த வாரம் அறிமுக சுற்று ஒளிபரப்பாக உள்ள நிலையில் 12 சாமானிய போட்டியாளர்களுடன் இணைந்து நடனமாட போகும் 12 பிரபலங்கள் யார் யார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

1. ஜான் எட்வின் - ரிஷா
2. நாகராஜ் - ரியா விஸ்வநாதன்
3. ஆனந்த் - நக்ஷத்திரா
4. சுரேஷ்குமார் - ஹேமா
5. பூர்ணிமா - ராஜா வெற்றி வசந்த்
6. இப்ராஹிம் - அக்ஷிதா
7. குரு - ரியா சௌதாரி
8. கௌரி கோபன் - விவேக் ராஜகோபால்
9. பிரின்ஸ் சேவியர் - காயத்ரி ஹேமா
10. ஸ்வாதி நாயர் - சபரி
11. பிரியதர்ஷினி - உதய்
12. அக்ஷதா - சூப்பர் டீலக்ஸ் நவீன்

இந்த 12 ஜோடிகள் மக்கள் மனதை கவர போவது எப்படி? என்பது குறித்து அறிய டான்ஸ் ஜோடி டான்ஸ் ரிலோடட் 2 நிகழ்ச்சியை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சனி மற்றும் ஞாயிறு தினங்களில் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரி லோடட் 2 நிகழ்ச்சியின் அறிமுக சுற்று நடைபெற உள்ளதை தொடர்ந்து வரும் ஞாயிறு மதியம் 3 மணிக்கு பிரதீப் குமாருடன் சரிகமப குழுவினர் இணைந்து கலக்கிய காற்றின் மொழி என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

மறுநாள் புத்தாண்டு தினமான திங்கள் கிழமை காலை 8 மணிக்கு சுகி சிவம் தலைமையில் வெற்றியை தீர்மானிப்பது அறிவா? உணர்ச்சியா? என்ற தலைப்பில் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யும் கலகலப்பான சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது. அதனை தொடர்ந்து காலை 9:30 மணிக்கு சந்தானம் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

பிறகு மதியம் 3 மணிக்கு காஜல் அகர்வால், யோகி பாபு நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கோஷ்டி திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது, சிறப்பு பட்டிமன்றம் மற்றும் திரைப்படங்களுடன் புத்தாண்டு தினத்தை ஜீ தமிழோடு இணைந்து கொண்டாட தயாராகுங்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
துப்பாக்கிகளுக்கு நடுவில் காவ்யா வர்ஷினி : ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வைரல்துப்பாக்கிகளுக்கு நடுவில் காவ்யா ... தெய்வமகன், ரமணா, லவ் டுடே - ஞாயிறு திரைப்படங்கள் தெய்வமகன், ரமணா, லவ் டுடே - ஞாயிறு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in