சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி |
பாக்கியலெட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் வில்லன், ஹீரோ, காமெடியன் என கலக்கி வருகிறார் நடிகர் சதீஷ். இவருக்கென தற்போது தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சதீஷ் அடிக்கடி ஏதாவது அப்டேட் வெளியிடுவார். அந்த வகையில் தற்போது சீரியல் ஒன்றின் புரோமோவை வெளியிட்டுள்ள அவர், 'நான் மிகவும் ஆசையுடனும், பெரும் எதிர்பார்ப்புடனும் நடிக்க ஒப்புக்கொண்ட ரோல். ஆனால், எதிர்பார்ப்புகள் பெரும் ஏமாற்றத்தில் தான் முடியும் என்ற பாடத்தை வாழ்க்கை மீண்டும் எனக்கு கற்பித்துள்ளது. நாம் என்னதான் சிறப்பாக செயல் செய்தாலும் அதை அழிப்பதற்கு சில பேர் காத்துக்கொண்டிருப்பார்கள். நண்பர்களே இது தான் உண்மை. வாழ்க்கை தத்துவம்' என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பாக்கியலெட்சுமி தொடரில் சதீஷ் சிறப்பாக நடித்து வருவதை கூறி அவருக்கு இதை விட பல நல்ல ப்ராஜெக்ட்டுகள் கிடைக்கும் என வாழ்த்தி வருகின்றனர்.