சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை | 'தக் லைப்' டிரைலர் : 24 மணி நேர சாதனை என்ன? | 'ரெட்ரோ' 235 கோடி வசூல்: ஷாக் ஆன ரசிகர்கள் - உண்மை என்ன? | ஆறு மாத இடைவெளியில் அழகாக யோசிக்கும் ஆதிக் | விஜய்சேதுபதி சொன்ன சைக்கிள் கதை |
சினிமாவிலிருந்து சின்னத்திரைக்கு கரை ஒதுங்கிய டெல்னா டேவிஸ் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக அன்பே வா தொடரில் மெயின் ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில், அண்மையில் அவரது நடித்து வந்த கதாபாத்திரம் இறந்துவிட்டதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பாகவே ஸ்ரீகோபிகா என்ற இரண்டாவது நாயகியை சீரியலுக்குள் அறிமுகப்படுத்தி அந்த கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவத்தையும் திரைக்கதையில் அதிகப்படுத்தியுள்ளனர். மற்றொருபுறம் டெல்னா டேவிஸ் வெளிநாட்டில் ஜாலியாக டூர் சுற்றிக்கொண்டே வரிசையாக போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சினிமாவை வேண்டாம் என்பது போல் பேசியிருந்த டெல்னா டேவிஸ் அண்மையில் நடிகர் மாதவனுடன் புகைப்படம் வெளியிட்டு டிஸ்கசன் செய்ததாக குறிப்பிட்டிருந்தார். ஒருவேளை புதிய படத்தில் கமிட்டாவதால் சீரியலிலிருந்து விலகிவிட்டாரா? என்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்து வருகிறது.