சினிமா தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர், சின்னத்திரை நடிகை மஹாலெட்சுமியை திருமணம் செய்து கொண்டார். ரவீந்தர் பண மோசடி வழக்கில் கைதாகி சிறைக்கு சென்ற போது மஹாலெட்சுமி ஜாலியாக சீரியலில் நடித்துக்கொண்டு போட்டோஷூட் வெளியிட்டு வருவதாக பலரும் அவரை குற்றம் சுமத்தி வந்தனர். இந்நிலையில் சிறையிலிருந்து ஜாமினில் விடுதலையாகியுள்ள ரவீந்தருடன் மஹாலெட்சுமி போட்டோ வெளியிட்டு, 'எனது முகத்தில் சிரிப்பை வரவழைக்க நீங்கள் தவறியதில்லை. காதலுக்கு காரணம் ஒருவரது நம்பிக்கை தான். இங்கு என்னை விட நம்பிக்கையே உன்னை காதலிக்கிறது. அதே காதலை என் மீது பொழிந்து என்னை முன்பு போல் காப்பாற்றுவாயாக. நான் உன்னை மிகவும் காதலிக்கிறேன் அம்மு' என்று பதிவிட்டுள்ளார்.
ரவீந்தர் - மஹாலெட்சுமிக்கு இடையே இருக்கும் இந்த புரிதலையும், காதலையும் பலரும் வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர்.