வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் |
சினிமா நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகாவை பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்கு அனுப்பியுள்ளார். ஏற்கனவே, ஜோவிகா விரைவில் ஹீரோயினாக நடிப்பார் என வனிதா பேட்டி அளித்திருந்த நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் அவர் என்ட்ரி கொடுத்திருப்பது குறித்து அதிகமான கேள்விகள் எழுந்தது.
இதுகுறித்து தற்போது பதிலளித்துள்ள வனிதா, 'பிக்பாஸ் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி. அங்கு அவள் அவளாகத்தான் இருக்க முடியும். இப்படி நடந்து கொள் என்று யாரும் சொல்லித்தர முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. என் மகளிடம் நிறையவே அது இருக்கிறது. அவளைப் பற்றி நான் சொல்ல விரும்பவில்லை. உங்களுக்கே புரியும், அவளை உங்களுக்கு பிடிக்கும். 100 நாட்களில் அவள் யார் என்பது தெரிந்துவிடும். அதற்காகத்தான் என் மகளை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தேன்' என்று கூறியிருக்கிறார்.