புது முகங்களின் 'ஹைக்கூ ' | 'காந்தாரா' வழக்கு ரத்து செய்ய ரன்வீர் சிங் மனு | சென்னையில் மீண்டும் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தும் இளையராஜா | 'கல்கி 2' படப்பிடிப்பு அப்டேட் தந்த அமிதாப் பச்சன் | பிளாஷ்பேக் : டப்பிங் கலைஞர் பாரதிராஜா | பிளாஷ்பேக் : தமிழ் படத்தை தணிக்கை செய்த ஜவஹர்லால் நேரு | ஜமா இயக்குனரின் அடுத்த படம் நிறைவு | ரஜினி படப்பிடிப்பு எப்போது : சிபி சக்கரவர்த்தி சொன்ன பதில் | படங்கள் இல்லை : சிங்கிள் தியேட்டர்களுக்கு மீண்டும் சிக்கல்… | சென்னையும்... ‛கப்புள் பிரண்ட்லி' படமும் : இயக்குனர் அஷ்வின் பேட்டி |

பிரபல சினிமா நடிகையான ரம்யா கிருஷ்ணன் சின்னத்திரையிலும் வம்சம், தங்கம் போன்ற பல அதிரடியான ஹிட் தொடர்களில் நடித்துள்ளார். ஆனால், அதன்பின் சீரியலில் கமிட்டாகாத அவர் தற்போது நீண்ட இடைவேளைக்கு பின் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் நள தமயந்தி என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் தற்போது நடித்து வருகிறார். அந்த சீரியலில்ன் புதிய புரோமோ அண்மையில் வெளியாகிய நிலையில் அதில் ரம்யா கிருஷ்ணன் கெட்டப் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நளதமயந்தி தொடர் வருகிற அக்டோபர் 9 முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.