இத்தனை வயதிலும் பிகினியில் அசத்தும் ஸ்ரேயா | நான் உயிர் உள்ள மனுஷி - சாய் பல்லவி | மீண்டும் புத்துயிர் பெறும் 'சங்கமித்ரா' | சினிமாவில் வெற்றி தான் முக்கியம் : மணிகண்டன் | நீக் படத்திற்கு எஸ்.ஜே.சூர்யா விமர்சனம் : தனுஷ் நன்றி | முதல் 3 நாட்களில் 12 கோடி வசூலித்த கங்கனாவின் 'எமர்ஜென்சி' | 2025ல் ராஷ்மிகாவின் முதல் படம் பிப்ரவரி 14ல் வெளியாகிறது! | பிரேமலு 2ம் பாகம் அப்டேட் | காதலியை மணந்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து | கவுதம் மேனன் இயக்கத்தில் ரவி மோகன் |
விஜய் டிவி சீரியல்களில் அறிமுகமாகி பிரபலமாகியுள்ள ஷ்ரவந்திகா ஸ்ரீகாந்த் தற்போது தெலுங்கு சீரியலில் ஹீரோயினாக நடிக்க உள்ளார். கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த ஷ்ரவந்திகா விசுவல் கம்யூனிகசேன் படித்து முடித்த பின் ஷார்ட் பிலிம்களில் நடித்து வந்தார். அதன் பின் விஜய் டிவியில் 'தென்றல் வந்து என்னை தொடும்', 'ஈரமான ரோஜாவே' சீசன் 2 வில் ஆகிய தொடர்களின் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இந்நிலையில், தமிழில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வந்த ஷ்ரவந்திகாவுக்கு தெலுங்கு சீரியலில் ஹீரோயினாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜீ தெலுங்கு சேனலில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள 'ஜபிலி கோசம் ஆகாசமல்லே' என்ற தொடரில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக ஷ்ரவந்திகா நடித்து வருகிறார். அதன் புரோமோ அண்மையில் வெளியாகிய நிலையில் தெலுங்கு ரசிகர்களுடன் தமிழ் ரசிகர்களும் சேர்ந்து ஷ்ரவந்திகாவை வாழ்த்தி வருகின்றனர்.