ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சந்திரலேகா தொடர் நீண்ட நாட்கள் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றியடைந்தது. 2014 ஆம் ஆண்டு ஆரம்பமான இந்த தொடர் 6 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி கடந்த 2022 ஆம் ஆண்டில் தான் நிறைவடைந்தது. இந்த 6 ஆண்டிலும் இந்த தொடரில் நடித்த இரண்டு கதாநாயகிகளான ஸ்வேதா பண்டேகரும், நாகஸ்ரீயும் இறுதி வரை மாறவில்லை. அதனாலேயே இவர்களுக்கு ரசிகர்கள் அதிகம். அதிலும், வில்லியாக நடித்த நாகஸ்ரீ தமிழில் அறிமுகமான முதல் சீரியலிலேயே வில்லியாக அருமையாக நடித்திருந்தார். இந்த தொடர் முடிந்த பிறகு ஸ்வேதா பண்டேகர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். ஆனால், நாகஸ்ரீ கன்னடத்தில் பிசியாக சீரியல் நடித்து வருகிறார். அவர் சக நடிகர்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் தமிழ் ரசிகர்கள் நாகஸ்ரீயை சீக்கிரமே தமிழில் கம்பேக் கொடுக்கச் சொல்லி கேட்டு வருகின்றனர்.