பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் |
நடிகை வனிதா விஜயகுமார் அண்மையில் தன் மகள் ஜோவிகா திரைத்துறையில் நடிக்கவிருப்பதை உறுதி செய்தார். இந்நிலையில், அவர் தற்போது வெளியிட்டுள்ள பதிவானது ஜோவிகா படத்தில் கமிட்டாகியிருக்கிறாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. வனிதா தனது மகள் ஜோவிகாவுடன் ஷூட்டிங்க் ஸ்பாட்டில் இருக்க அருகில் ஒருவர் கேமராவை காண்பிப்பது போல் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும், அந்த பதிவில் 'அர்ப்பணிப்புமிக்க நடிகர்களை உருவாக்கி கொண்டு வர முடியாது அவர்கள் தானாகவே தன் பாதையில் பிறந்து வருவார்கள்' என குறிப்பிட்டு தனது மகள் ஜோவிகாவை டேக் செய்துள்ளார். மேலும், ஹேஷ்டேக்கில் 'கடைசித்தோட்டா' படத்தின் பெயரை பதிவிட்டுள்ளார். எனவே, வனிதாவின் மகள் ஜோவிகா 'கடைசித்தோட்டா' படத்தின் மூலம் அறிமுகமாகிறாரா? என பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையில் வனிதா பிக்பாஸ் வீட்டில் ஜோவிகாவுடன் இருக்கும் புகைப்படத்தை ஸ்டோரியில் வைத்திருந்தார். அதைபார்த்துவிட்டு ஜோவிகா பிக்பாஸிலும் எண்ட்ரியாகிறார் என்றும் செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.