பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

பிரபல சின்னத்திரை நடிகையான காயத்ரி சாஸ்திரி, ரோஜா சீரியலுக்கு பின் இலக்கியா என்ற தொடரில் பாசமான மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மெட்டி ஒலி சரோ, ஓம் நமசிவாய பார்வதி என்றால் ஒருகாலத்தில் தமிழ்நாட்டுக்கே இவரை தெரியும். சின்னத்திரை ரசிகர்களில் பெரும்பாலோனோர் இவரது ரசிகர்களாக இருந்தனர். ஆனால், தற்போது ஹீரோயின்களுக்கு அம்மா மாமியார் கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறார்.
இந்நிலையியில், அவர் சிலம்பம் சுற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக, இந்த வயதிலும் இப்படி சிலம்பம் சுற்றுகிறாரே! என 2கே கிட்ஸ்கள் பலரும் காயத்ரிக்கு 50 வயதுக்கு மேல் இருக்கும் என மதிப்பிட்டு வருகின்றனர். ஆனால், உண்மையில் காயத்ரிக்கு 40 வயது தான் ஆகிறது. அவருக்கு பள்ளிக்கு செல்லும் வயதில் ஒரு மகள் இருக்கிறாள். திருமணத்திற்கு பின் உடல் எடை அதிகரித்துவிட்ட காரணத்தினால் தான் சீரியல்களில் மாமியார், அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.




