இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் |
ரோஜா தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக வலம் வந்தார் நடிகை பிரியங்கா நல்காரி. தொடர்ந்து ஜீ தமிழில் சீதா ராமன் சீரியலில் என்ட்ரி கொடுத்த அவர் திடீரென காதலர் ராகுல் வர்மாவை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு கணவருக்கு நடிப்பது பிடிக்கவில்லை, அதனால் விலகுகிறேன் என்பது போல் அறிவித்துவிட்டு சீரியலிலிருந்து வெளியேறினார். இதனால் அவரது ரசிகர்கள் சோகமடைந்தனர். ஆனால், தற்போது ஆந்திரா மாநிலத்தின் கிராமத்து பெண் போல் கெட்டப் போட்டு போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பிரியங்கா, 'ரோஸ் இஸ் பேக்', 'ரீ-என்ட்ரி இன் தெலுங்கு' என சில ஹேஷ்டேக்குகளையும் தனது பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார். இதனால், அவர் மீண்டும் தெலுங்கு சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.