போலீஸ் அதிகாரியாக நடிக்கும் தர்ஷன் | உபாசனா நடிக்கும் 'எனை சுடும் பனி' | பிளாஷ்பேக் : பிரபு, கார்த்திக் நடிக்க மறுத்த படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : உலக போர், சென்னை மாகாணத்தை கிண்டல் செய்த படம் | ஒரு இடைவெளிக்குத் தயாராகும் தமிழ் சினிமா | 'டிராகன்' படத்தில் ஐந்து இயக்குனர்கள் | அதிக பணம் கொடுத்து தடுமாறும் ஓடிடி நிறுவனங்கள் | சிரஞ்சீவிக்கு 'யுகே' பார்லிமென்ட்டில் பாராட்டு | ஹிந்தி படப்பிடிப்பில் ஹோலி கொண்டாடிய தனுஷ் | 'லியோ' கதைதான் 'குட் பேட் அக்லி' கதையா? |
தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் பி.ஆர்.கிருஷ்ணா. திரைப்படங்களில் பாடுவதோடு மேடை கச்சேரிகளிலும் பாடி வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் கிருஷ்ணா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஓன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: தி.நகர் ஜி.என். செட்டி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சினிமா பாடகர் ஸ்ரீராமின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு அழைப்பு வந்ததன் பேரில் இசைநிகழ்ச்சியைப் பார்க்கச் சென்றேன்.
அப்போது இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் ரகுநாதன் என்னைப் பார்த்ததும். அங்கிருந்து சென்று விடுமாறு மிரட்டல் விடுத்தார், உடனே அவரிடம், நான் ஏன் செல்ல வேண்டும் எனக் கேட்டதற்கு, உன்னைக் கொல்வதற்காக 10 பேரை ஏற்பாடு செய்துள்ளேன் எனக் கூறியதுடன் அங்கிருந்த சில நபர்களைக் காண்பித்து, அவர்கள் உன்னைக் கொல்லாமல் விடமாட்டார்கள், உன் நாட்களை எண்ணிக்கொள் என்று மிரட்டினார்.
நடிகர் ஈஸ்வர் ரகுநாதனுக்கும், எனக்கும் எந்த வித முன்பகையோ, விரோதமோ இல்லை. அவரிடம் பேசி பல ஆண்டுகளாகின்றன. எனவே, எனக்கு கொலை மிரட்டல் விடுத்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் ரகுநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரிடம் இருந்து எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு தனது புகார் மனுவில் கிருஷ்ணா கூறியிருக்கிறார். இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.