சின்னத்திரையில் பாண்டியராஜன் | எப்போ கல்யாணம் பண்ணுவீங்க? அமீர் - பாவ்னிக்கு ரசிகர்கள் கேள்வி | 'டிராகான் Vs நி.எ.மே.எ.கோபம்' - இளைஞர்களைக் கவரப் போவது யார்? | ஒரு மணி நேரத்திலேயே பொய் பேசிய கயாடு லோஹர் | கன்னடர்களின் கோபத்திற்கு ஆளான ராஷ்மிகா மந்தனா | ஒன்பது படங்களில் ஒன்றாவது வசூலைக் குவிக்குமா ? | இசையமைப்பாளர் தமனுக்கு கார் பரிசளித்த பாலகிருஷ்ணா | பட்டங்கள் வாழ்க்கைக்கு உதவுவதில்லை : ராஷ்மிகா | ஷங்கர் இயக்கத்தில் துருவ் விக்ரம்? | கேங்கர்ஸ் படத்தில் ஜந்து கெட்டப்பில் வடிவேலு! |
தமிழ் திரைப்படங்களில் தங்கை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தாரணி. பூவே உனக்காக, பட்ஜெட் பத்மநாபன் உள்ளிட்ட பல படங்களில் இவரை நாம் பார்த்திருப்போம். அழகான தோற்றம் கொண்ட இவர் ஹீரோயினாக நடிப்பார் என்றே பலரும் கருதினர். அதற்கான வாய்ப்பும் தாரணிக்கு கிடைத்தது. ஆனால், அந்த படத்தின் கேமராமேன் தாரணியை அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு அழைத்து, விடாமல் டார்ச்சர் செய்துள்ளார்.
அதற்கு அவர் சம்மதிக்காமல் மறுத்துவிட, சூட்டிங்கின் போது அதிக சூடான லைட்டை தாரணி மீது அடித்து கஷ்டப்படுத்தியுள்ளார். இதன்காரணமாக தான் சினிமாவில் பெரிய அளவில் ஜொலிக்க வேண்டிய தாரணி சோபிக்காமலேயே போய்விட்டாராம். அதன்பின் சின்னத்திரை பக்கம் கரை ஒதுங்கிய தாரணி தற்போது பல சீரியல்களில் தொடர்ச்சியாக நடித்து வருவதுடன் அவ்வப்போது சில படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.