எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை |
வீஜே, ஆர்ஜே, வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட், ஸ்கிரிப்ட் ரைட்டர் என பன்முக திறமைகொண்ட விமல்குமார் தற்போது சீரியலிலும் ரோலில் கலக்கி வருகிறார். அவரது நடிப்பை பலரும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், நடிப்பதற்காக வாய்ப்பு தேடி அலைந்த ஆரம்ப காலகட்டங்களில் அவர் சந்தித்த அனுபவங்களை அண்மையில் பகிர்ந்துள்ளார்.
ஒருமுறை விமல் குமார் ஆடிஷனுக்காக சென்ற இடத்தில் அவரிடம் ஒரு போட்டோவை காண்பித்து அதிலிருப்பது போல் முடி வெட்டி வர சொல்லியுள்ளனர். விமலும் முடிவெட்டி சென்றிருக்கிறார். மறுநாளும் மீண்டும் முடி வெட்டி வர சொல்லி அனுப்பி வைத்துள்ளனர். இதுபோல் மூன்று நாள் அவரை அலைக்கழித்துள்ளனர். நான்காவது நாள் விமல் அங்கு சென்று பார்த்தபோது அந்த குழுவானது இடத்தை காலி செய்து சென்றுவிட்டனர். இதனால் மனமுடைந்த விமல்குமார் ரூமுக்கு சென்று தண்ணீர் குடித்துவிட்டு படுத்துக்கொண்டாராம்.
அதுபோல் மீடியாவில் பயணிப்பதால் சில இயக்குநர்களும் விமல்குமாருடன் நட்பாக பழகி வருகின்றனர். ஆனாலும், வாய்ப்பு என்று கேட்கும் போது கேரக்டர் டிமாண்ட் பண்ண வேண்டும், வாய்ப்பில்லை என்று வெளிப்படையாகவே மறுத்துவிடுவார்களாம். இதுபோல் பல கவலையான இரவுகள் என் வாழ்க்கையில் இருக்கிறது. அதெல்லாம் என் டைரி பக்கங்களில் எழுதி வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
தற்போது எதிர்நீச்சல் தொடரில் கரிகாலன் ரோலில் விமல்குமார் நடித்து, சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறார்.