கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரக்ஷிதா சுரேஷ். இனிமையான குரலின் மூலம் பல லட்ச ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள ரக்ஷிதா தற்போது சினிமாவில் முன்னணி பாடகியாக வலம் வர ஆரம்பித்துள்ளார். தவிரவும் உள்நாட்டு, வெளிநாட்டு மேடை கச்சேரிகளிலும் பாடல்கள் பாடி வருகிறார். அந்த வகையில் மலேசியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இடத்தில் கார் விபத்தில் சிக்கியுள்ளார். மலேசியா ஏர்போர்ட்டுக்கு ரக்ஷிதாவும் குழுவினரும் காரில் வந்து கொண்டிருந்த போது, கார் திடீரென சாலையோர டிவைடரில் பலமாக மோதியுள்ளது. இருப்பினும், இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் சிறு காயங்களுடன் தப்பித்துள்ளனர்.
இதுகுறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள ரக்ஷிதா 'நடந்த விசயத்தை நினைத்தால் உடல் நடுங்குகிறது. உயிருடன் இருப்பது அதிர்ஷ்டம். ஏர்பேக்குகளுக்கு நன்றி' என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரக்ஷிதாவின் ரசிகர்கள் அவரது உடல்நலம் குறித்து நலம் விசாரித்து வருகின்றனர்.