முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் தமிழில் மூட்டை கட்டிய காஜல் |
திரைப்படங்களை ஸ்பூப் செய்யும் காமெடி நிகழ்ச்சியான 'லொள்ளு சபா' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஜீவா. திரைப்படங்களிலும், சீரியல்களிலும் ஒரு காலத்தில் பிசியாக நடித்து வந்தார். அவர் தற்போது தமிழருவி மணியன் ஆரம்பித்துள்ள காமராஜர் மக்கள் கட்சியில் மாநில இளைஞரணி தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
தனது அரசியல் பிரவேசம் பற்றி கூறிய அவர், 'நான் எப்படி ரஜினி ரசிகனோ, அதேபோல் அடிப்படையில் எனக்கு காமராஜரை பிடிக்கும். தமிழக அரசியலை பொறுத்தவரை காமராஜர் ஆட்சிக்கு பிறகிருந்தே வெற்றிடம் உள்ளது. இன்றும் நல்ல ஆட்சிக்கு உதாரணம் காமராஜர் ஆட்சியை தான் உதாரணம் சொல்கிறோம். திராவிட கட்சிகளின் தலைவர்கள் கூட 'அண்ணா ஆட்சி', 'எம்.ஜி.ஆர் ஆட்சி' என சொல்வது இல்லை. காமராஜர் மக்கள் கட்சியை தமிழகம் முழுக்க கொண்டுபோய்ச் சேர்க்க வேலைகள் தொடங்கியுள்ளோம்.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளோம்' என கூறியுள்ளார். ஜீவா அரசியலில் நுழைந்திருக்கும் தகவல் அவரது ரசிகர்கள் பலருக்கும் தெரியாத நிலையில், அவர் அளித்துள்ள பேட்டியை பார்த்து பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.