அதிதி ஷங்கரின் அடுத்த படம் | தனுசுடன் மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் | விஜய் சேதுபதியை இயக்கும் மிஷ்கின் | இயற்கை விவசாயத்தில் இறங்கிய நடிகர் கிஷோர் | படப்பிடிப்பில் தவறாக நடந்தாரா யஷ்? - ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | நிதின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | விஷ்ணுவர்தன் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | ரிலீஸுக்கு தயாராகும் வணங்காமுடி ; டப்பிங் பணிகள் தீவிரம் | தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகையை பிளாக் செய்து பின் அன்பிளாக் செய்த அல்லு அர்ஜுன் | ஏ.ஆர் ரஹ்மானை ஆனந்த கண்ணீர் விட வைத்த மலையாள சூப்பர் சிங்கர் |
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா நெடுந்தொடர் சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சிபு சூரியன், வினுஷா தேவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். முதல் சீசனை பொறுத்தமட்டில் அதன் வெற்றிக்கு காரணமாக தொடக்கத்தில் அஞ்சலி, பிறகு வெண்பா என இரண்டு வலுவான வில்லி கதாபாத்திங்களின் வடிவமைப்பு முக்கிய காரணமாக இருந்தது. அதிலும் வெண்பாவாக நடித்த பரீனா சின்னத்திரையின் டாப் வில்லிகள் லிஸ்ட்டில் சேர்ந்தார். எனவே, கதையிலும் பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் என்டர்டெய்மெண்டாக இருந்தது.
ஆனால், இந்த சீசன் முதல் சீசனை போல் விறுவிறுப்பாக இல்லை என்று ரசிகர்கள் குறைப்பட்டு கொண்டிருந்தனர் . இந்நிலையில், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் சீசன் 2 விலும் பரீனாவையே வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் களமிறக்கியுள்ளனர். அதிலும் இன்ட்ரோ காட்சியிலேயே ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் போலீஸிடமே அட்ராசிட்டி செய்கிறார் இந்த வெண்பா. வெண்பாவின் இந்த ரீ-என்ட்ரி பாரதி கண்ணம்மா சீசன் 2 வை முதலிடத்திற்கு கொண்டு செல்ல கைகொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்