நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்களில் ஆயிஷா மிகவும் பிரபலமானவர். தொலைக்காட்சி சீரியல்களிலும், சில படங்களிலும் நடித்துள்ளார். ஆயிஷாவுக்னெ ரசிகர் கூட்டமே உள்ளது. பிக்பாஸ் வீட்டில் அவர் கண்டிப்பாக டைட்டில் வெல்வார் என்று கூட பலரும் நினைத்தனர். ஆனால், ஆயிஷா எவிக்டாகி வெளியேறினார். ஆயிஷா பிக்பாஸ் வீட்டிலிருந்தபோது அவரது காதல் வாழ்க்கை குறித்து பல சர்ச்சைகள்க்ஷ கிளம்பின.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் காதலரின் முகத்தை காட்டாமல் புகைப்படம் வெளியிட்டு தான் காதல் வயப்பட்டிருப்பதை உறுதிசெய்தார். தற்போது, காதலர் தினத்தை முன்னிட்டு காதலருடன் எடுத்துக் கொண்ட ரொமான்ட்டிக்கான புகைப்படங்களை பகிர்ந்து பலருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
எனினும், அந்த புகைப்படத்தில் இருப்பது யார்? பெயர் என்ன? என்கிற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. ஆயிஷாவும் தனது பதிவுகளில் தனது காதலர் பற்றிய விவரங்களை குறிப்பிடவில்லை. ஆனால், பிக்பாஸ் வீட்டில் ஆயிஷா யோகேஷ் என்பவரை பற்றி மிகவும் சிலாகித்து பேசியிருந்ததால் ஆயிஷாவின் காதலர் பெயர் யோகேஷாக இருக்கலாம் என சிலர் பதிவிட்டு வருகின்றனர். ஆயிஷாவின் காதலுக்கு சக பிக்பாஸ் ஹவுஸ்மேட்களான குயின்சி ஸ்டான்லி, மணிகண்டன் உட்பட பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற போவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.