இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
விஜய் டிவியில் ராஜா ராணி சீசன் 1-ன் வெற்றியை தொடர்ந்து ராஜா ராணி சீசன் 2க்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. யார் கண் பட்டதோ தெரியவில்லை. அந்த சீரியலின் நாயகியான ஆல்யா மானசா முதலில் விலகினார். அதன் பின் ரியா விஸ்வநாத் ஓரளவு அந்த கதாபாத்திரத்தை நிறைவு செய்தார். அப்போது வில்லியாக கலக்கி வந்த அர்ச்சனாவும் சீரியலை விட்டு விலகியதால் இந்த தொடர் டிஆர்பியில் சறுக்கி வருகிறது.
இந்நிலையில் நாயகி ரியா விஸ்வநாத்தும் சீரியலை விட்டு விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அண்மையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'ராஜா ராணி சீரியலில் இனி சந்தியாவாக நான் இல்லை. எனக்கு பதிலாக இன்னொருவர் நடிக்கிறார். அவருக்கு சப்போர்ட் செய்யுங்கள்' என்று பேசியிருந்தார். வீடியோவில் அவரது முகம் வாட்டமாக இருப்பதால் ரியா விஸ்வநாத் சோகமாக அந்த வீடியோவை வெளியிட்டாரா? என ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரது புதிய தொடக்கம் இனிதாக அமைய வேண்டும் எனவும் வாழ்த்தி வருகின்றனர்.