
நட்சத்திர ஜோடி திருமணம்
சின்னத்திரையில் நடிப்பவர்கள் அதிக காலம் ஒரு புராஜக்டில் இணைந்து பணியாற்றுவதால் காதலித்து திருமணம் செய்யது அதிகமாக இருக்கிறது. அந்த வரிசையில் இப்போது வாழ்க்கையில் இணைந்திருக்கும் ஜோடி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "ஒண்ணா இருக்க கத்துக்கணும்" தொடரில் நடிக்கும் ஷியாமந்தா கிரணும், ஜி5 சேனலில் ஒளிபரப்பாகும் "அயலி" தொடரில் நடித்து வரும் ஆனந்த செல்வனும் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவரும் இதற்கு முன்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான "ஆயுத எழுத்து" என்கிற சீரியலில் இணைந்து நடித்திருக்கிறார்கள். அந்த சீரியலில் ஆனந்த் செல்வன் ஹீரோவாக நடித்திருந்தார். அதே சீரியலில் கோதை என்கிற கதாபாத்திரத்தில் ஷியாமந்தா நடித்திருந்தார். அந்த சீரியலில் நடித்த போது தான் இருவருக்கும் இடையே காதல் உருவானது கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தவர்கள் தற்போது திருமணபந்தத்தில் இணைந்திருக்கிறார்கள். கோவையில் நேற்று நடந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கெண்டனர்.
இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். ஆனந்த செல்வனை விட ஷியாமந்தா 7 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!