
19வது மாடியில் புது வீடு வாங்கி குடியேறிய தங்கதுரை
தங்கதுரை தற்போது சென்னை கோயம்பேட்டில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 19வது மாடியில் புதிய வீடு வாங்கி குடியேறி இருக்கிறார். 3 படுக்கை அறை கொண்ட வீடு இது. இந்த குடியிருப்பு வளாகத்தில் நீச்சல் குளம், விளையாட்டு மைதானம், நூலகம் உள்ளிட்ட வசதிகள் இருக்கிறது. இதன் திறப்பு விழாவில் விஜய் சேதுபதி, செந்தில், அமைச்சர் ராஜ்மோகன், தவெக எம்.எல்.ஏ ஸ்ரீநாத் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து தங்கத்துரை கூறும்போது “நாங்கள் சென்னைக்கு வந்த புதிதில் மிகச்சிறிய வீட்டில் கூட்டுக் குடும்பமாக இருந்தோம், அப்பா எங்கள கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். அதனால் அவரால் சொந்த வீடு வாங்க முடியவில்லை. சென்னையில் எத்தனையோ வீடுகளில் குடியிருந்தோம், பல அவமானங்களை சந்தித்தோம். இப்போது கஷ்டப்பட்டு இந்த வீட்டை வாங்கி இருக்கிறேன். எனக்கு கிடைக்காத வசதிகள் என் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதுதான் முதல் நோக்கம்” என்றார்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!