ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
பிக்பாஸ் நிகழ்ச்சியில் துப்புரவு தொழிலாளர்கள் மனித கழிவுகளை அல்லும் அவலம் குறித்து விக்ரமன் தனது நாடகத்தின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார். இதற்கு பரவலான பாராட்டுகள் கிடைத்தது. இந்நிலையில், பிக்பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் விக்ரமனுக்கு துப்புரவு தொழிலாளர்கள் மாலை அணிவித்து மகுடம் சூட்டி பாராட்ட, அங்கேயிருந்த அசீமும் தனலெட்சுமியும் விக்ரமனுக்கு கிடைக்கும் பாராட்டுகளை பார்த்து ஸ்தம்பித்து உட்கார்ந்திருந்தனர். இதைபார்த்த ஷிவின் மற்றும் ரட்சிதா அசீமை மேலும் கடுப்பேற்றும் வகையில் விக்ரமன் பாராட்டப் பெறுவதை கூச்சலிட்டு கொண்டாடினர். இதனால், அசீமின் முகம் மேலும் சுருங்கிபோனது. தற்போது இந்த புரோமோ வீடியோ சோஷியல் மீடியாவில் வைரல் ஆனது.