நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சின்னத்திரை நடிகை பவித்ரா ஜனனிக்கு பிரபல நடிகர் விஜய் சேதுபதி பர்த்டே சர்ப்ரைஸ் கொடுத்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவி நடிகையான பவித்ரா ஜனனி இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாவார். தற்போது 'தென்றல் வந்து என்னை தொடும்' தொடரில் நடித்து வருகிறார். வருகிற ஜனவரி 30ம் தேதி பவித்ராவுக்கு பிறந்தநாள் வருகிறது. இதனை முன்னிட்டு அவரது நண்பர்கள் சியாமந்தா கிரண் மற்றும் ரியோ ராஜ் ஒரு சூப்பரான சர்ப்ரைஸை கொடுத்துள்ளனர். பவித்ராவுக்கு மிகவும் பிடித்த நடிகரான விஜய் சேதுபதியின் வீட்டுக்கு கண்ணை கட்டி அழைத்துச் சென்று அவரை சந்திக்க வைத்துள்ளனர். விஜய்சேதுபதியை பார்த்த பவித்ரா ஒருநிமிடம் வாயடைத்து போய் நிற்கிறார். விஜய் சேதுபதி பவித்ராவை அழைத்து கைகுலுக்கி பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்கிறார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள பவித்ரா மறக்கமுடியாத பிறந்தநாள் பரிசு என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.