பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
டிக் டாக் பிரபலமான ரமேஷ் தனது நடன திறமையை வெளிப்படுத்தி புகழ் அடைந்தார். ரமேஷ் 'சிக்கு புக்கு ரயிலே' நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலானது. இதனையடுத்து அவருக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்து தமிழமெங்கும் பிரபலமானர். மேலும், சமீபத்தில் வெளியான அஜித்குமாரின் துணிவு படத்திலும், ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ஜெயிலர் படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நேற்றைய தினம் கேபி பார்க்கில் அவரது குடியிருப்பு பகுதியின் பத்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இறந்து போன ரமேஷிற்கு நேற்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தற்கொலை ரசிகர்கள் மத்தியில் அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே அவர் தற்கொலை செய்திருக்க மாட்டார் என்றும் அவரது மறைவில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது குடும்பத்தார் கூறி வருகின்றனர்.