விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான பாக்கியலெட்சுமி தொடரில் இரண்டாவது நாயகியான ராதிகா கதாபாத்திரத்தில் முதலில் ஜெனிபர் நடித்து வந்தார். அவர் விலகிய பின் ரேஷ்மா பசுபலேட்டி நடித்து வருகிறார். அண்மையில் இந்த தொடர் 700வது எபிசோடுக்கான வெற்றிவிழாவை கொண்டாடினாலும், திரைக்கதை முன்பு போல சுவாரசியமாக இல்லாததால் டிஆர்பியில் சறுக்கி வருகிறது.
இந்நிலையில், ரேஷ்மாவுக்கு ஜீ தமிழின் புதிய தொடர் சீதாராமன் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனைதொடர்ந்து ரேஷ்மா சீரியலை விட்டு விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகின. அவரும் பாக்கியலெட்சுமி சீரியல் ஸ்பாட்டில் தனது நினைவுகளை பகிர்ந்து வீடியோ வெளியிட்டிருந்தார். எனவே, அவர் விலகுவது உறுதி எனவும், அவருக்கு பதில் வனிதா விஜயகுமார் இனி ராதிகா கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
எனினும் சீரியலை விட்டு விலகுவது குறித்து ரேஷ்மாவோ, சீரியலில் கமிட்டாவது குறித்து வனிதாவோ எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.