இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
பிக்பாஸ் சீசன் 6 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எலிமினேட் ஆன ஹவுஸ்மேட்டுகள் உட்பட பல பிரபலங்கள் என்ட்ரி கொடுத்து நிகழ்ச்சியை புரொமோட் செய்து வருகின்றனர். இந்த வார எவிக்சனில் ஏடிகே வெளியேறியுள்ளார். இந்நிலையில், போட்டியின் இறுதிக்கட்டத்தில் நடக்கும் பணப்பெட்டி டாஸ்க்கானது அண்மையில் நடைபெற்றது. பைனலிஸ்ட் 6 பேரில் கதிர் மட்டும் பணம் மூட்டையை அறுக்க, மற்ற போட்டியாளர்கள் காத்திருக்கும்படி கேட்டனர்.
அப்போது கதிர் நான் பணத்திற்காக இந்த முடிவை எடுக்கவில்லை என கூறி பணமூட்டையை அறுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் முடிவை எடுத்தார். கதிர் வீட்டிலிருந்து வெளியேறும் முடிவால் சோகத்தில் ஆழ்ந்த ஷிவினிடம், போட்டிக்காக வாழ்த்து கூறி கை குலுக்க முயன்றார் கதிர். ஆனால், ஷிவின் கைகொடுக்க மறுத்து கைகூப்பி கதிருக்கு விடைகொடுத்தார். கதிர் சிரித்தப்படியே அங்கிருந்து சென்றார். இந்த வீடியோவானது தற்போது இணையதளங்களில் வைரலாக பலரும் ஷிவினுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.