ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

சின்னத்திரை நடிகையான வித்யா பிரதீப் கையில் சிகரெட்டை பிடித்து கெத்தாக அமர்ந்திருக்கும் புகைப்படம் கடந்த பொங்கல் தினத்தன்று திடீரென வைரலானது. இதைபார்த்து முதலில் ரசிகர்கள் பலரும் அதிர்ந்தனர். ஆனால், அது அவர் நடித்து வரும் 'திரும்பிப்பார்' படத்தின் போஸ்டர்லுக் என்பது பின்னர் தான் தெரிய வந்தது. வித்யா பிரதீப் இந்த படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார். அந்த கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும் வகையில் தான் இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப காலக்கட்டங்களில் வித்யா பிரதீப் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், சின்னத்திரையில் அவர் நடித்த 'நாயகி' தொடர் தான் அவருக்கு பெரிய புகழை பெற்றுத்தந்தது. இதன் மூலம் வித்யா பிரதீப்புக்கு மீண்டும் வெள்ளித்திரை வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், 2021ம் ஆண்டில் மட்டும் அவர் நடிப்பில் 6 படங்கள் வெளியாகிவுள்ளது. தவிர 9 புதிய படங்களிலும் அவர் கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




