பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

ஒரு காலத்தில் ஆண்கள் ஆல்கஹால் அருந்துவதே மாபெரும் பாவச்செயலாக பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போதெல்லாம் பாலினபேதமின்றி ஆண், பெண் அனைவரும் டீ, காபி போல் ஆல்கஹால் குடிப்பதை இன்றைய லைப் ஸ்டைல் சகஜமாகிவிட்டது. அதற்கேற்றார்போல் மக்கள் மத்தியில் பிரபலமான திரைத்துறை நடிகைகள் சிலரே, தன் வீட்டில் பார் செட்டப் வைத்திருப்பதை பெருமையாக வீடியோ வெளியிட்ட செய்திகளையும் சமீப காலங்களில் கடந்து வந்துள்ளோம்.
இந்நிலையில், 'அரண்மனைக்கிளி', 'பச்சக்கிளி' ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமான மோனிஷா, திராட்சை பழங்களை வைத்து வீட்டிலேயே ஒயின் தயாரிக்கும் வீடியோவை வெளியிட்டு 'சரக்கடிக்கலாமா?' என கேட்டுள்ளார். அந்த விடியோவானது வைரலாகி பரவி வரும் நிலையில், சிலர் 'கொஞ்சமா க்ரேப் ஜூஸ் குடிச்சிதுக்கே இவ்வளோ சீனா?' என ஜாலியாக கலாய்த்து வருகின்றனர்.
இன்னும் சிலர் எலைட் ட்ரிங்க், ஸ்கின் கேர் என பல்வேறு பேன்ஸியான வார்த்தைகளை கூறி வைன் அருந்துவதை ஞாபகப்படுத்தி சிலர் மார்க்கெட்டிங் செய்து வருகின்றனர். ஆனால், திராட்சைரசம் புளித்தால் அது ஆல்கஹால் தானே?. இதையெல்லாம் புரோமோட் செய்ய வேண்டுமா? என்றும் கேள்வியை எழுப்பியுள்ளனர்.




