அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு |
பிக்பாஸ் வீட்டில் ரச்சிதா ஸேப்பாக கேம் விளையாடிக் கொண்டிருக்க, வெளியே அவரது கணவர் தினேஷ் மனைவிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் ரச்சிதாவின் விளையாட்டுக்கு இடையூறாக இருக்கும் நபர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கி வருகிறார். முன்னதாக ராபர்ட் மாஸ்டரின் செயல்களை கண்டித்து பல பதிவுகளை வெளியிட்டிருந்த அவர் தற்போது மைனா நந்தினியின் பக்கம் தனது கவனத்தை செலுத்தியிருக்கிறார்.
சென்றவார எபிசோடின் போது ரச்சிதாவை திருமணத்திற்கு கூப்பிடாததால் அவர் தன்னுடன் பேசுவதையே நிறுத்திவிட்டார் என்றும், ஷூட்டிங் போது ரச்சிதா தன்னை இப்படி டிரெஸ் போடனும் அப்படி டிரெஸ் போடனும் என்று சொல்லி கட்டாயப்படுத்தினார் என்றும் மணியிடம் ரச்சிதாவை பற்றி மைனா குறை கூறியிருந்தார். தவிர ஏலியன் டாஸ்க்கிலும் எல்லை மீறி ரச்சிதாவிடம் கேள்வி கேட்டார்.
இந்நிலையில், ரச்சிதாவின் கணவர் தினேஷ் கூறுகையில் '10 ஆண்டுக்கும் மேலான தோழி என்று சொல்லிக்கொள்ளும் சக போட்டியாளர் உன்னை தூண்டிவிடும் வகையில் மோசமான கேள்வி கேட்கிறார். ஆனால், நீ அதை அழகாக சமாளித்தாய். தனிப்பட்ட தாக்குதலை திறமையாக எதிர்கொண்டாய். பலரது மனதை வென்று வா!' என்று பதிவிட்டு ஐ ஸ்டேண்ட் வித் ரச்சிதா என ஹேஷ்டேக் போட்டுள்ளார்.
இதனையடுத்து ரசிகர்கள் பலரும் ரச்சிதாவை மைனா டார்க்கெட் செய்வதாக கோபமடைந்துள்ளனர். மேலும், 'சரவணன் மீனாட்சி' சீரியல் படப்பிடிப்பின் போது ரச்சிதாவை மைனா புகழ்ந்து பேசும் வீடியோவையும் வெளியிட்டு மைனாவை பச்சோந்தி எனவும் விமர்சித்து வருகின்றனர்.