'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி' | கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி | பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் | 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப் | ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் | அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை | 30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர் | சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? | லோகா வாய்ப்பை மறுத்தீர்களா ? கேள்வியால் டென்ஷனான பார்வதி |

சின்னத்திரை நடிகையாக இருந்த ரச்சித மகாலட்சுமி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இன்னும் பிரபலமானார். பிக்பாஸ் பிரபலமான பாலாஜி முருகதாஸ் நடிப்பில் பயர் என்ற படம் விரைவில் வெளிவர இருக்கிறது. ஆபாச காட்சிகள் அதிகம் நிறைந்த இந்த படத்தை விழிப்புணர்வு படமாக பார்க்க வேண்டும் என்று அந்த படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான ஜே.சதீஷ் குமார் கூறியிருந்தார்.
இதற்கிடையில் பயர் படத்தில் நடித்ததற்கு தனக்கு சம்பளமே தரவில்லை என்று பாலாஜி முருகதாஸ் பதிவிட, ரச்சிதாவும் அதை ஆமோதித்து பதிவிட்டிருந்தார். ரச்சிதா தனது பதிவில் பயர் படத்தை ஷிட் என்று கூறியதோடு ஜே.சதீஷ் குமாரையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதனையடுத்து அதற்கு தற்போது பதிலளித்த தயாரிப்பாளர், 'நீங்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு தான் நடித்துள்ளீர்கள். இலவசமாக நடிக்கவில்லை. அதற்கான ஆதாரங்கள் அக்ரிமெண்ட் அனைத்தும் உள்ளது. பயர் படத்தில் நீங்களும் நடித்துள்ளீர்கள். இப்போது அதே படத்தை ஷிட் என்று விமர்சனம் செய்கிறீர்கள். அந்த ஷிட்டில் தான் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்' என்று காத்திரமாக கூறியுள்ளார்.