போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

பிக்பாஸ் வீட்டிற்குள் ரொமான்ஸ் என்ற பெயரில் சீசனுக்கு சீசன் பல காட்சிகள் அரங்கேறும். அந்த வகையில் இந்த சீசனிலும் ராபர்ட் - ரச்சிதாவின் ரொமான்ஸ் விளையாட்டு அதிக அளவில் கவனம் ஈர்த்துள்ளது. ரச்சிதாவை தனது க்ரஷ் என்று சொல்லி செல்லமாக மூக்குத்தி என பெயர் வைத்து அழைத்து வருகிறார் ராபர்ட் மாஸ்டர்.
சமீபத்தில் கூட ரச்சிதாவை முத்தம் கொடுக்க சொல்லி ராபர்ட் மாஸ்டர் வற்புறுத்திய விஷயம் சோஷியல் மீடியாவில் பெரிய சர்ச்சையாக வெடித்தது. அந்த விவகாரத்தில் பலரும் ரச்சிதாவின் பக்கம் சப்போர்ட்டாக நின்று ராபர்ட் மாஸ்டரை வெளியேற்ற வேண்டும் என கூறினர். ரச்சிதாவின் கணவர் தினேஷ் இந்த விவகாரம் குறித்து போஸ்ட் போட்டிருந்தார்.
இந்நிலையில், அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ராபர்ட் மாஸ்டரை காட்டிலும் மைனாவை கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த பேட்டியில், 'ராபர்ட் மாஸ்டர் இப்படியெல்லாம் செய்ய மைனா தான் காரணம். மைனா தான் ராபர்ட் மாஸ்டரை தேவையில்லாமல் ஏத்தி விடுகிறார். ராபர்ட் மாஸ்டரும், மைனாவும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினால், ரச்சிதா நிச்சயமாக பைனல் வரை செல்வார்' என்று கூறியுள்ளார். அவரது கருத்துக்கு தற்போது ரச்சிதாவின் ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.