காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
தமிழ் சின்னத்திரையில் பல ஆண்டுகளாக நம்பர் 1 இடத்தை தக்க வைத்துக் கொண்டு வந்த தொடர் ரோஜா. புது சீரியல்களின் வரவுகளால் தற்போது டிஆர்பியில் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. இருப்பினும் இந்த சீரியலுக்கான ஆடியன்ஸ்களும், இதில் நடித்து வரும் நடிகர் நடிகைக்கான ரசிகர்களும் குறைந்தபாடில்லை. அந்த வகையில் ரோஜா தொடரின் நாயகியான ப்ரியங்கா நல்காரிக்கும் பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது. இன்ஸ்டாவில் அவர் வெளியிட்டு வரும் ரீல்ஸ், டான்ஸ் மற்றும் போட்டோஷூட்களுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
இந்நிலையில், ரோஜா தொடர் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ப்ரியங்கா மணப்பெண் கெட்டப்பில் தன் பெற்றோருடன் நின்று கொண்டிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார். இதை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள் ப்ரியங்கா நல்காரிக்கு தான் திருமணம் எனவே இனி ரோஜா சீரியலில் அவர் நடிக்கமாட்டார் என்று நினைத்து பீல் செய்ய தொடங்கினர். ஆனால், உண்மையில் ப்ரியங்காவின் சகோதரியான பாவ்னா நல்காரிக்கு தான் அண்மையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இந்த திருமணத்திற்கு ப்ரியங்காவின் சக நடிகர்களான அஸ்வந்த் திலக் மற்றும் சந்தோஷ் வருகை தந்துள்ளனர். அவர்கள் பகிர்ந்து கொண்ட புகைப்படங்களில் இருந்து திருமணம் ப்ரியங்காவுக்கு அல்ல அவரது சகோதரிக்கு தான் என்பது தெரியவந்துள்ளது. இந்த உண்மையை தெரிந்து கொண்ட ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.